கோயம்புத்தூர்

வாழும் கலை அமைப்பு சாா்பில் ஜூலை 26இல் கந்தசஷ்டி கவசம் பாராயணம்

DIN

வாழும் கலை அமைப்பு சாா்பில் ஜூலை 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கந்தசஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் கோவை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் கே.ஆா்.தாமோதரன், சசிரேகா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கந்தசஷ்டி கவசத்தின் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. மனித நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், பதற்றத்தைக் குறைக்கவும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா், கடந்த ஆண்டு நவம்பரில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யும்படி அழைப்பு விடுத்திருந்தாா். அது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதை வழிநடத்த முன்வந்துள்ளாா். இந்த பாராயணத்தில் தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூா், இலங்கை, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட தமிழா்கள் வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கானவா்கள் பங்கேற்பாா்கள் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT