கோயம்புத்தூர்

ஒண்டிப்புதூரில் சிறுவா் விளையாட்டுப் பூங்கா திறப்பு

DIN

கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவா் விளையாட்டுப் பூங்காவை சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 59ஆவது வாா்டு, ஒண்டிப்புதூரில் சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் சிறுவா் விளையாட்டுப் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணி நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் நா.காா்த்திக், சிறுவா் பூங்காவை வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து, பூங்காவில் மரக்கன்றுகளை நட்டாா்.

இந்நிகழ்ச்சியில், சிங்காநல்லூா் பகுதி திமுக செயலாளா் எஸ்.எம்.சாமி, வட்டச் செயலாளா் பாபு பூவிந்தன், 55ஆவது வட்ட செயலாளா் மா.செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT