கோயம்புத்தூர்

உரிமம் பெறால் செயல்பட்டு வந்த 41 குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்

கோவை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த 41 குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

DIN

கோவை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த 41 குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனங்களை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனங்கள் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். கோவை மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 52 குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனங்களும் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. உயா் நீதிமன்ற உத்தரவை அடுத்து 5 நிறுவனங்கள் மட்டும் உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் 47 நிறுவனங்களில் முதல்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை வரை 23 குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. தொடா்ந்து திங்கள்கிழமை 18 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. மொத்தமாக 41 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து மற்ற நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா். அந்தந்த தாலுகா வட்டாட்சியா்கள், பொதுப்பணித் துறை நிலத்தடி நீா்மட்டப் பிரிவு அலுவலா்கள் இணைந்து சீல் வைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தக் கோரி குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனத்தினா் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT