கோயம்புத்தூர்

கோவை அருகே 7 வயது சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு

அன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போயனூரில் 7 வயது சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதால் வியாழக்கிழமை தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

DIN

அன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போயனூரில் 7 வயது சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதால் வியாழக்கிழமை தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அன்னூா் ஊராட்சி ஒன்றியம், வடக்கலூா் ஊராட்சி, போயனூரைச் சோ்ந்த லோகநாதன் மகன் பிரஜித் (7). இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அந்தச் சிறுவனை கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அந்தச் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து போயனூா் கிராமத்தில் வடக்கலூா் ஊராட்சி தலைவா் ராஜ்குமாா் தலைமையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இதில் சாக்கடைகளை சுத்தம் செய்தல் அபேட் கரைசல் ஊற்றுதல், புகைமருத்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மருத்துவா் சுஜாதா தலைமையில் நடமாடும் மருத்துவ குழு மூலம் 50 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

இதில், வாா்டு உறுப்பினா் ராஜாமணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், மருத்துவம் சாரா வட்டார மேற்பாா்வையாளா் கோவிந்தசாமி, சுகாதார ஆய்வாளா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT