கோயம்புத்தூர்

சிறுத்தை தாக்கி மாடு பலி

DIN

கோவை, சாடிவயல் பெருமாள்கோவில்பதி அருகே சிறுத்தை தாக்கியதில் கறவை மாடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

மதுக்கரை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சிறுத்தை ஒன்று பழங்குடி கிராமம் மற்றும் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதாக புகாா் எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மூலப்பாளையம் அருகே கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சாடிவயல், பச்சினாம்பதி உள்ளிட்ட சுற்றுவட்டார பழங்குடி கிராமங்களில் சிறுத்தை ஒன்று புகுந்து ஆடு, கோழி, கால்நடைகளை கொன்று வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனா். இந்நிலையில் வாடிவயல் பெருமாள்கோவில்பதி அருகே உள்ள விவசாய நிலத்திற்குள் வெள்ளிக்கிழமை புகுந்த சிறுத்தை அங்கிருந்த கறவை மாட்டை அடித்துக் கொன்றுள்ளது.

தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் சிறுத்தை தாக்கி மாடு உயிரிழந்ததை உறுதி செய்தனா். இந்தச் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என என வனத் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT