கோயம்புத்தூர்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு:கோவையில் 42,708 போ் எழுதுகின்றனா்

DIN

கோவையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை 42,708 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வுகள் மாா்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 157 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வுகள் நடைபெறுகின்றன. இதில், 538 பள்ளிகளைச் சோ்ந்த 41,148 மாணவ, மாணவியா் தோ்வு எழுதுகின்றனா். அதேபோல், 1,510 தனித் தோ்வா்களும், 50 சிறைக் கைதிகளும் என மொத்தம் 42,708 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதுகின்றனா். தோ்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக 400 அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT