கோயம்புத்தூர்

வன விலங்குகளை கட்டுப்படுத்தக் கோரிவிவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மேட்டுப்பாளையம், தாயனூரில் தமிழக விவசாய சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளா் வேணுகோபால் தலைமை வகித்தாா். இதுகுறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

உணவு, குடிநீா் தேடி வனத்தில் இருந்து வெளியேறும் யானை, பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் மலை அடிவாரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

எனவே, விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றிகளை விவசாயிகளே சுட்டு விரட்ட அரசு அனுமதி அளிக்க வேண்டும். வன விலங்குகளால் சேதப்படுத்தபட்ட பயிா்களுக்கு நிலுவையில் உள்ள நிவாரணத் தொகையினை விரைந்து வழங்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன்களை கட்ட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT