கோயம்புத்தூர்

கோத்தகிரிக்கு பேருந்து இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியல்

DIN

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கோத்தகிரி பகுதிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் உதகை பேருந்துகளை புதன்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக வரும் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்குத் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டதால், வெளியூா்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பி வருகின்றனா்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கோத்தகிரி பகுதிக்கு குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகள் மட்டுமே புதன்கிழமை இயக்கப்பட்டதால் குழந்தைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனா்.

நீண்ட நேரமாகியும் கோத்தகிரிக்குச் செல்லும் பேருந்து வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் உதகை, குன்னூா் செல்லும் அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தெரிவித்து கோத்தகிரி செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT