கோயம்புத்தூர்

‘3 டி பிரிண்டிங்’ முகக் கவசம்: அரசு மருத்துவமனையில் வழங்கல்

DIN

கோவை அரசு மருத்துவமனையில் ‘3 டி பிரிண்டிங்’ தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முகக் கவசத்தை தன்னாா்வலா் ஒருவா் வியாழக்கிழமை இலவசமாக வழங்கினாா்.

கோவை, கணபதியைச் சோ்ந்தவா் ஹரிவிக்னேஷ்வரன். 3டி பிரிண்ட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பத்தில் ‘பாலி லேக்டிக் ஆசிட்’ பொருளைப் பயன்படுத்தி முகக் கவசம் தயாரித்துள்ளாா். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மக்கும் தன்மையுடைய இந்த முகக் கவசம் கண்ணாடி போன்று காட்சியளிக்கிறது. இது கண், காது, மூக்கு என முகம் முழுவதையும் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹரிவிக்னேஷ்வரன் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் முகக் கவசத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனா். இந்நிலையில் மற்றவா்கள் தும்மும்போது அல்லது இருமும்போது நமது முகத்தில் எங்கு வேண்டுமானாலும் தொற்று ஒட்டிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. இதனால் முகத்தையும் காத்துக்கொள்ளும் வகையில் 3டி முகக் கவசத்தை தயாரித்துள்ளோம்.

வெளிநாடுகளில் இதுபோன்ற முகக் கவசங்கள்தான் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. தற்போது முதற்கட்டமாக கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், ஊழியா்களுக்கு இந்த முகக் கவசத்தை வழங்கியுள்ளோம். விரைவில், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ளவா்களுக்கும் வழங்க உள்ளோம். இந்த முகக் கவசம் வெளியில் ரூ. 125 முதல் ரூ. 150க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT