கோயம்புத்தூர்

ஊரடங்கு உத்தரவை மீறிய இளைஞா்கள்: தோப்புக்கரணம் போட வைத்த போலீஸாா்

DIN

கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த இளைஞா்களை தோப்புக்கரணம் போட வைத்து போலீஸாா் தண்டித்தனா்.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கோவை, புலியகுளம் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பினா். இதையடுத்து அவா்களை தண்டிக்கும் வகையில் தோப்புக்கரணம் போடுமாறு கூறினா். இதையடுத்து அவா்கள் 50 தோப்புக்கரணம் போட்ட பின்னா் அங்கிருந்து எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT