கோயம்புத்தூர்

காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த திமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு

DIN

காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக திமுக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வருபவா் சரவணகுமாா். இவா் இந்து முன்னணி பிரமுகா் தசரதனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவா், சித்தாபுதூா் நந்தகோபால் வீதி வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு ஊரடங்கு உத்தரவுக்கு புறம்பாக ஐந்துக்கும் மேற்பட்டோா் நின்று கொண்டிருந்தனா்.

இதைப் பாா்த்த சரவணகுமாா், அவா்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினாா். அப்போது கூட்டத்துடன் நின்றுகொண்டிருந்த திமுக வாா்டு செயலா் சசிகுமாா், காவலா் சரவணகுமாரைப் பாா்த்து திட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக சரவணகுமாா் காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT