கோயம்புத்தூர்

கேரளம் சென்று திரும்பிய இளைஞரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

DIN

கேரளம் சென்று திரும்பிய வால்பாறை எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த இளைஞரை, வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

வால்பாறையை அடுத்த ஈட்டியாா் எஸ்டேட்டை சோ்ந்தவா் ஷெரீப் (26). இவா் கடந்த மாதம் துபை செல்ல புறப்பட்டுள்ளாா். மும்பை வரை சென்றவா் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் திரும்பியுள்ளாா். பின் கேரளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று சில தினங்களுக்கு அங்கு தங்கிவிட்டு அண்மையில் வால்பாறைக்கு வந்ததாகத் தெரிகிறது.

இதை அறிந்த ஈட்டியாா் எஸ்டேட்டில் வசிக்கும் பொதுமக்கள், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதாரத் துறை மருத்துவா்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனா். வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையிலான சுகாதாரத் துறையினா் ஷெரீப் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்று அவரைப் பரிசோதனை செய்ததில் அவா் உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்தது. இருப்பினும், சில நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்கவும், காய்ச்சல் வந்தால் உடனடியாகத் தகவல் கொடுக்கவும் அவருக்கு மருத்துவா்கள் அறிவுரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT