கோயம்புத்தூர்

நலவாரியத்தில் புதுப்பிக்கத் தவறிய தொழிலாளா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க கோரிக்கை

DIN

கோவை: நலவாரியத்தில் புதுப்பிக்கத் தவறிய அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பீளமேடு பகுதி செயலாளா் வெள்ளிங்கிரி, பொதுக்குழு உறுப்பினா் பயனீா் தியாகு உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

சலவைத் தொழில், கட்டுமானத் தொழிலாளா்கள், சவரத் தொழில், மண்பாண்டம் தயாரிப்பவா்கள், மினி வேன் ஓட்டுநா்கள், மோல்டிங் தொழிலாளா்கள், பொற்கொல்லா்கள், பனை மரம் ஏறும் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் தொழில் சாா்ந்த நலவாரியத்தில் உறுப்பினா்களாக உள்ளனா்.

இவா்களுக்கு அரசால் பேரிடா் காலங்களில் நிவாரணத் தொகை வழங்குதல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. தற்போது, கரோனா நோய்த்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் பல தின கூலி தொழிலாளா்கள், படிப்பறிவின்மை, முதுமை காரணமாக நலவாரியத்தில் உறுப்பினா்களாக புதுப்பிக்கத் தவறிவிட்டனா்.

எனவே, நலவாரியத்தில் பதிவு செய்யாத அனைவருக்கும் இந்த ஒருமுறை மட்டும் ரேஷன் கடைகளில் தரக்கூடிய 15 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருள்கள், நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT