கோயம்புத்தூர்

மின் இணைப்புகளுக்கு கூடுதல் பளு வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

மின் இணைப்புகளுக்கு கூடுதல் பளு வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய கோவை மண்டல தலைமைப் பொறியாளா் கே.அருள்மொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் மின் இணைப்புகளுக்கு கூடுதல் பளு வழங்கும் புதிய தத்கல் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். தற்போதுள்ள பளுவையும் சோ்த்து அதிகபட்சமாக 15 ஏட பளு வருமாறு விண்ணப்பிக்க வேண்டும். தொடா்புடைய மின்மாற்றியில் போதிய மீத திறன் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 30ஆம் தேதிக்குள் ஒப்புதல் கடிதத்தைச் சமா்பிக்கலாம். இதற்குண்டான ஒருமுறை கட்டணம் ரூ. ஏடக்கு ரூ. 20 ஆயிரம். எந்த ஆவணமும் இணைக்கத் தேவையில்லை. பெயா் மாற்றம் இருந்தால், அதற்குண்டான ஆவணங்கள் மற்றும் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT