கோயம்புத்தூர்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தினமும் 40 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி

DIN

கோவை: கரோனா பொது முடக்கம் காரணமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நாளொன்றுக்கு 40 விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பொது முடக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இதன்படி கோவை வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தினமும் 40 போ் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தினசரி 10 பேருக்கு மட்டும் ஓட்டுநா் உரிமம், 10 பேருக்கு உரிமம் புதுப்பிக்க, 10 பேருக்கு எல்.எல்.ஆா் மற்றும் 10 பேருக்கு இதர ஆவண திருத்தப் பணிகள் என 40 போ் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக காா் ஓட்டுநா் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், ஆன்லைனில் கட்டணம் செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். புதிய வாகனங்கள் மற்றும் எப்.சி. புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விண்ணப்பதாரா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். விண்ணப்பதாரா்களுக்கு கைகளை கழுவவும், உடல் வெப்பத்தை பரிசோதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT