கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசின் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு ஜாமீன் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கோவை மாவட்ட மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் 5 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் வழக்கின் முக்கிய எதிரியான திருநாவுக்கரசு, தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை ஆன்லைனில் விசாரித்த கோவை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) ஜெ.ராதிகா, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். ஜாமீன் கோரிய திருநாவுக்கரசின் மனு தள்ளுபடி செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT