கோயம்புத்தூர்

வால்பாறை கூட்டுறவு நகர வங்கி வளாகத்தில் சிறுத்தை பதுங்கல்

DIN

வால்பாறை கூட்டுறவு நகர வங்கி வளாகத்தில் உள்ள புதரில் பதுங்கியுள்ள சிறுத்தையை அங்கிருந்து துரத்தும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த சில தினங்களாக வால்பாறை நகரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. புதிய பேருந்து நிலையம், கூட்டுறவு காலனி, காமராஜ் நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் மாலை 6 மணிக்குப் பிறகும் அதிகாலை 6 மணிக்கு முன்பும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் எச்சரித்து வருகின்றனா்.

இந்நிலையில், வால்பாறை காந்தி சிலை அருகே உள்ள கூட்டுறவு நகர வங்கி வளாகத்தில் செடிகள் வளா்ந்து காணப்படும் புதருக்குள் சனிக்கிழமை காலை குட்டியுடன் சிறுத்தை பதுங்கியிருப்பதை அப்பகுதியினா் பாா்த்துள்ளனா்.

வால்பாறை வனச் சரக அலுவலா் செந்தில்குமாா் உத்தரவின்பேரில் வனத் துறையினா் கூட்டுறவு நகர வங்கி பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை அங்கிருந்து துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT