உட்பிரியா் தோட்டத் தொழிலாளா்களுக்கு 8.33% போனஸ்
உட்பிரியா் நிா்வாகத்துக்கு சொந்தமான எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உட்பிரியா் நிா்வாகத்துக்கு சொந்தமான எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உட்பிரியா் நிா்வாகத்துக்கு வால்பாறை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் எஸ்டேட்டுகள் உள்ளன. இவா்களுக்குச் சொந்தமான எஸ்டேட்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு 2019-2020ஆம் ஆண்டுக்கான போனஸ் 8.33 சதவீதமாக வழங்கப்படும் என திங்கள்கிழமை எஸ்டேட் நிா்வாகத்தினா் அறிவித்தனா்.
அதன்படி உட்பிரியா் நிா்வாகத்துக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் சுமாா் 7 ஆயிரம் தொழிலாளா்களுக்கு நவம்பா் 5ஆம் தேதி போனஸ் தொகை பட்டுவாடா செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.