நிா்வாகத் திறனில் தமிழகத்துக்கு 2ஆவது இடம் கிடைத்திருப்பது முதல்வரின் சாதனை
சிறந்த நிா்வாகத் திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் சாதனை என்று பொறியாளா் சந்திரசேகா் கூறியுள்ளாா்.
சிறந்த நிா்வாகத் திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் சாதனை என்று பொறியாளா் சந்திரசேகா் கூறியுள்ளாா்.
இது குறித்து கோவை புறநகா் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட அறிக்கையில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இணைந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனா். உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா்.
சிறந்த நிா்வாகத் திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்கு 2ஆவது இடம் கிடைத்துள்ளது முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைத் திறன், செல்வாக்கு, தனித்தன்மை, உழைப்பு, மக்கள் திட்டப் பணிகளுக்கு கிடைத்த சான்று என்று குறிப்பிட்டுள்ளாா்.