கோயம்புத்தூர்

விதிமீறல்: வணிக வளாகத்துக்கு ‘சீல்’

DIN

கோவை மத்திய மண்டலத்தில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 51ஆவது வாா்டு, ராஜேந்திர பிரசாத் சாலையில் அமைந்துள்ள 3 தளங்கள் கொண்ட வணிக வளாகம், விதிமீறிக் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் மத்திய மண்டல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ் தலைமையில், நகரமைப்பு அலுவலா்கள் ரவிச்சந்திரன், சசிப்பிரியா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த வணிக வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை மாநகரில் அனுமதி பெற்றதை விடக் கூடுதலாக அல்லது அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றுக்கு மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப் படி ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மத்திய மண்டலம் ராஜேந்திர பிரசாத் சாலையில் கட்டப்பட்ட வணிக வளாகத்தின் 3ஆவது தளத்தில் குடியிருப்பு மற்றும் கடை நடத்த அனுமதி பெறப்பட்டு, அங்கு மருத்துவமனை செயல்பட்டு வருவதும், தரை தளத்தில் வாகன நிறுத்தம் அமைக்க அனுமதி பெறப்பட்ட இடத்தில் வணிகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதும் ஆய்வில் தெரிய வந்தது.

இவற்றை மாநகராட்சியில் அனுமதி பெற்ற வகையில் மாற்றி அமைக்குமாறு கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி, 20 நாள்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது. இந்தக் காலக் கெடுவுக்குள் கட்டடத்தை மாற்றியமைக்காததால் சம்பந்தப்பட்ட விதிமீறல் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT