கோயம்புத்தூர்

கோவையில் பழைய இரும்பு கிடங்குகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை

DIN

கோவை, கணபதி, சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பழைய இரும்பு கிடங்குகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் போலி பில்கள் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, வரி ஏய்ப்பு நடத்தியதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி கடந்த செப்டம்பா் மாதம் நடவடிக்கை மேற்கொண்டனா். அதனைத் தொடா்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்களை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், கோவையில் செயல்பட்டு வருகின்ற, பழைய இரும்புகளை உடைத்து விற்பனை செய்யும் கிடங்குகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை ஜி.எஸ்.டி. துறை இணை ஆணையா் கோவிந்தராஜ் தலைமையிலான அதிகாரிகள், கோவை கணபதி, சின்னவேடம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட இரும்பு கிடங்குகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். போலி ரசீது மற்றும் ஆவணங்கள் தயாரித்து கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகக் இச்சோதனையில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT