கோயம்புத்தூர்

வனத்தை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை

DIN

வால்பாறை வனப் பகுதியை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வால்பாறை பகுதியில் பெரும்பாலான எஸ்டேட்கள் வனத்தை ஒட்டியுள்ளன.

இரவு நேரங்களில் யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி எஸ்டேட் பகுதிக்கு வந்து செல்வது சமீபகாலமாக தினந்தோறும் நடைபெறுகிறது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு வனத்தை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். பட்டாசு வெடிப்பதன் மூலம் வனவிலங்குகளுக்கு துன்புறுத்தல் ஏற்படுவதோடு மனித, வனவிலங்குகள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிக சப்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிப்பதை தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT