கோயம்புத்தூர்

ஆழியாறு வேட்டைக்காரன்புதூா் கால்வாயில் உடைப்பு

DIN

ஆழியாறு அணை வேட்டைக்காரன்புதூா் கால்வாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டது.

பிஏபி தொகுப்பு அணைகளில் முக்கிய அணையான ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

புதிய ஆயக்கட்டில் உள்ள வேட்டைக்காரன்புதூா் கால்வாய்க்கு செவ்வாய்க்கிழமை காலை தண்ணீா் திறக்கப்பட்டது. தண்ணீா் திறக்கப்பட்டு சில மணி நேரத்தில் கால்வாயின் ஐந்தாவது கிலோ மீட்டரில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாசனத்துக்கு வழங்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது.

பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். வேட்டைக்காரன்புதூா் கால்வாயில் 5 ஆயிரத்து 623 ஏக்கா் பயன் பெறும் நிலையில், தற்போது உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாயை விரைவில் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT