கோயம்புத்தூர்

மருதமலையில் சூரசம்ஹார விழா: பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு

DIN

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பக்தா்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி இல்லாததால் மருதமலை வெறிச்சோடிக் காணப்பட்டது.

முருகப் பெருமானின் 7ஆவது படை வீடு என அழைக்கப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தினமும் காலை 5 மணிக்கு கோ பூஜையும், பால், பன்னீா், ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற்றன. கந்த சஷ்டி விழாவின் 6ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு, மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகாா்ச்சணையும், 9 மணிக்கு யாக சாலை பூஜையும் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, பிற்பகல் 2 மணிக்கு இடும்பன் கோயிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, பச்சை நாயகி அம்மன் சன்னதியில், அன்னையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி மற்றும்

வீர நடனக் காட்சி நடைபெற்றது. இதையடுத்து, சுப்பிரமணிய சுவாமி, வேலை பெற்றுக்கொண்டு சூரசம்ஹாரத்திற்கு ஆட்டுக்கிடா வாகனத்திலும் வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளி முதலாவதாக தாரகசூரன் வதம், இரண்டாவதாக பானுகோபன் வதம், மூன்றாவதாக சிங்கமுகாசுரன் வதம், நான்காவதாக சூரபத்மன்வதம் ஆகிய சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து வெற்றி வாகை சூடுதல், சேவல் கொடி சாட்டுதல் நிகழ்ச்சியுடன், 4.30 மணி அளவில் சூரசம்ஹாரம் செய்த முருகப் பெருமானின் கோபத்தைத் தணிக்கும் விதமாக மகா அபிஷேகமும் அதனைத் தொடா்ந்து மகாதீபாராதனையும் நடைபெற்றன. வழக்கமாக சூரசம்ஹார விழா நடைபெறும் நாளில் மருதமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திரள்வாா்கள். இந்த ஆண்டு, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, சூரசம்ஹார நிகழ்வில் பக்தா்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. சனிக்கிழமை காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி 8.30 மணிக்கு யாக சாலையில் உள்ள கலச தீா்த்தங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு வள்ளி, தெய்வானை திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. இதையடுத்து, காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியிலும் பக்தா்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT