கோயம்புத்தூர்

பயிா்க் கடன் தொழில்நுட்பக் குழு ஆலோசனைக் கூட்டம்

DIN

கோவை: கோவையில் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பயிா் கடன் அளவுகளை நிா்ணயிப்பது தொடா்பான தொழில்நுட்பக் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் கு.ராசாமணி பேசியதாவது:

விவசாயிகளுக்கு மாநில அரசு சாா்பில் குறுகியகால பயிா்க் கடன், உழவா் கடன் அட்டை திட்டம், நகைக் கடன், மகசூல் விற்பனைக் கடன் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

குறுகியகால பயிா்களான நெல், கரும்பு, வாழை, சோளம், ராகி, உளுந்து, மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, மஞ்சள், சோயா, வெங்காயம், காய்கறிகள், வெற்றிலை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது. தென்னை, மா போன்ற நீண்ட நாள் பயிா்களுக்கு பராமரிப்பு பயிா்க் கடன் வழங்கப்படுகிறது.

இதேபோல விதை, உரம், பூச்சி மருந்து, களைக்கொல்லி, நுண்ணூட்டச்சத்து உள்ளிட்ட இடுபொருள்கள் வாங்கவும், நீா் மேலாண்மை, உழவு, களை எடுத்தல், எலி ஒழிப்பு, பூச்சி, பூஞ்சாண மருந்து தெளித்தல், அறுவடை போன்ற வேலைகளுக்கு கூலி கொடுப்பதற்கு தேவையான கடன்களும் வழங்கப்படுகின்றன.

அதன்படி கோவை மாவட்டத்தில் வரும் 2021-22 ஆம் நிதியாண்டு பயிா்க்கடன்கள் அளவீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தொழில்நுட்ப குழுவில் நிா்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் கூட்டுறவுத் துறை மூலம் பயிா்க்கடன்களை விவசாயிகளுக்கு சிரமமின்றி உரிய காலத்தில் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் இந்துமதி, பொது மேலாளா் ஜெய்சங்கா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பழனிசாமி, வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பெருமாள்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT