கோயம்புத்தூர்

பருவமழை: பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு பள்ளிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

DIN

கோவை: கோவை மாநகரில் பருவமழையின்போது பாதிக்கப்படும் மக்களைத் தங்கவைக்க பள்ளிகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் இடா்பாடுகளை எதிா்கொள்வது குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் பேசியதாவது:

கோவை மாநகராட்சிப் பகுதியில் பருவமழையின் போது, நீா் தேங்கும் நிலையில் உள்ள இடங்கள் மற்றும் சாலையோரங்களில் தேங்கும் மழை நீரை மோட்டாா் பம்ப் மூலமாக வெளியேற்றும் வாகனங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து மண்டலங்களிலும் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் மரங்கள் விழுந்தால் அவற்றை வெட்டி அப்புறப்படுத்த மரம் வெட்டும் கருவிகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பருவமழையின் போது பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு வசதியாக பள்ளிகளையும், நிவாரணப் பணிகளுக்கு தேவையான அளவு மணல் மூட்டைகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் கம்பங்கள் விழும் சூழலில் அவற்றை உடனடியாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீா் செல்லும் கால்வாய்களில் யாரும் குப்பைகளைக் கொட்டக் கூடாது. ஆபத்தான கட்டடங்களில் யாரும் வசிக்கக் கூடாது. அனைத்துத் துறை அலுவலா்களும் மழைக்காலத்தின் போது 24 மணி நேரமும் பணிகளைக் கண்காணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதையடுத்து, டெங்கு மற்றும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் பேசுகையில், ‘கழிவுநீா் செல்லும் இடங்களில் கொசு மருந்து தெளிப்பதை அதிகப்படுத்த வேண்டும். பழைய டயா்கள், தேங்காய் ஓடுகள், மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், நெகிழி கோப்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளா் லட்சுமணன், செயற்பொறியாளா் (பொலிவுறு நகரம்) சரவணக்குமாா், நகா் நல அலுவலா் ராஜா உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT