கோயம்புத்தூர்

வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு: குலுக்கல் முறையில் பயனாளிகள் நாளை தோ்வு

DIN

கோவை, உப்பிலிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சுயநிதி திட்டப் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்தவா்களில் குலுக்கல் முறையில் பயனாளிகள் வியாழக்கிழமை (நவம்பா் 26) தோ்வு செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டுவசதி பிரிவு உப்பிலிபாளையம் பகுதி-2 சுயநிதி திட்டப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நவம்பா் 20 ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் தோ்வு செய்து ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் வியாழக்கிழமை (நவம்பா் 26) நடைபெறுகிறது. சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளா், கோவை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் காலை 11 மணிக்கு குலுக்கல் நடைபெறுகிறது. விண்ணப்பதாரா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422-2493359, 94423 23251 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT