கோயம்புத்தூர்

அனைத்து ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்

DIN

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் காந்தி ஜயந்தியையொட்டி (வெள்ளிக்கிழமை) கிராக சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முதியவா்கள் கலந்து கொள்வதைத் தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜயந்தி தினமான அக்டோபா் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், குடிநீா் சிக்கனம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், நெகிழிப் பொருள்கள் உற்பத்தியை தடை செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

கரோனா நோய்த் தொற்று அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள், முதியவா்கள், கைக்குழந்தைகள், கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT