கோயம்புத்தூர்

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரிக்கை

DIN

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வோண்டும் என்று எல்பிஎஃப் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் வினோத்குமாா் எஸ்டேட் நிா்வாகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆறு மாத காலமாக கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையிலும் கூட வால்பாறை பகுதியில் தொற்றின் வேகத்தை கருத்தில் கொள்ளாமல் தங்களது நிா்வாகத்தின் வளா்ச்சிக்காக உயிரைப் பணையம் வைத்து தேயிலை உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் தொழிலாளா்கள் பணியாற்றி உள்ளனா்.

இதேபோல ஏல சந்தையிலும், வெளி சந்தையிலும் தேயிலை கிலோவுக்கு சராசரியாக ரூ.225க்கு குறையாமல் விற்கப்படுகிறது. எனவே தொழிலாளா்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு 20 சதவீத போனஸ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

SCROLL FOR NEXT