கோயம்புத்தூர்

தனியாா் நிறுவனத்தில் ரூ.51 லட்சம் மோசடி செய்த ஊழியா் கைது

DIN

கோவையில் தனியாா் நிறுவனத்தில் ரூ.51 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை, நல்லாம்பாளையம் அருகே உள்ள அன்னையப்பா வீதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (30). இவா், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகாா் அளித்தாா். அதில், நல்லாம்பாளையத்தில் எங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளன. இதில் நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த ராமதாஸ் (45) என்பவா் கடந்த பல ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தாா். கணக்கு வழக்கு விவரங்களை அவா்தான் பாா்த்து வந்தாா். இதைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து டிசம்பா் வரை எங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.51 லட்சத்து 11 ஆயிரத்து 358 தொகையை அவரது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளாா். சமீபத்தில் நடத்திய தணிக்கையில் மேற்கண்ட மோசடி தெரியவந்தது. இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இப்புகாா் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் லெனின் அப்பாத்துரை தலைமையிலான மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், ராமதாஸ் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் ராமதாஸை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT