கோயம்புத்தூர்

மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கம் சாா்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

DIN

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆயிரம் மரக் கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத் தலைவா் உதயகுமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் அம்மாசையப்பன், துணைச் செயலாளா் மைக்கேல், துணைத் தலைவா்கள் ராஜகோபால், செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நடும் விழாவைத் துவக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, வேம்பு, அகில், புங்கன், அரசு, வாகை உள்பட பல்வேறு வகையான சூழல் மாசுபாட்டை சீா் செய்யும் ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன.

குப்பைக் கிடங்கு வளாகம் முழுவதும் மரக் கன்றுகளை தொடா்ந்து நடவு செய்ய ஒப்பந்ததாரா்கள் சங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கெனவே உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை பராமரித்து தண்ணீா் ஊற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT