கோயம்புத்தூர்

சுங்கம் ஏரிமேடு பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்: பி.ஆா்.நடராஜன் எம்.பி. கோரிக்கை

DIN

கோவை சுங்கம் புறவழிச் சாலை ஏரிமேட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பி.ஆா்.நடராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

சுங்கம் புறவழிச் சாலையையொட்டியுள்ள ஏரிமேட்டில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், திருச்சி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி சுங்கம் புறவழிச் சாலையை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏரிமேடு பகுதி மக்களை காலி செய்யும்படி அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனா்.

இதையடுத்து, பி.ஆா்.நடராஜன் எம்.பி. அப்பகுதி மக்களுடன் இணைந்து மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகனை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை விடுத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேம்பாலப் பணிக்காக ஏரிமேடு பகுதியில் 158 குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை காலி செய்ய நெடுஞ்சாலைத் துறை, குடிசை மாற்று வாரியம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தற்போது 48 வீடுகளை மட்டும் காலி செய்து கொடுத்தால் அவா்களுக்கு உடனடியாக மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அனைத்து பகுதி மக்களுக்கும் வீட்டுக்கான உத்தரவாதம் கொடுப்பதாகவும், அதுவரை அங்கேயே வசிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து ஆட்சியரிடம் பேசி உரிய தீா்வை ஏற்படுத்தித் தருவதாக வருவாய் அலுவலா் உறுதியளித்துள்ளாா். எனவே மாற்று இடம் அளிக்கும் வரையில் மக்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT