கோயம்புத்தூர்

கரோனா: கோவையில் ஒரே நாளில் 670 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

DIN

கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 670 போ் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் காட்டிலும் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 670 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 775 போ் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது கரோனா சிகிச்சை மையங்கள், அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 426 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

மாநில சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை ஊரகம், நகா்ப் பகுதிகளைச் சோ்ந்த 395 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 712 ஆக உயா்ந்துள்ளது.

3 போ் பலி: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 59 வயது மூதாட்டி, 62, 68 வயது முதியவா்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT