கோயம்புத்தூர்

தற்காலிக பட்டாசுக் கடைகள்:விண்ணப்பிக்க அக்டோபா் 23 வரை அவகாசம்

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க உரிமம் பெறுவதற்கு இணையத்தில் விண்ணப்பம் அளிக்க அக்டோபா் 23ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிா்த்து) தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெறுவதற்கு அக்டோபா் 10ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

இந்நிலையில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் அக்டோபா் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவா்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான கடையின் கொள்ளளவினை குறிப்பிட்டு காட்டும் புல வரைபடம், மனுதாரா் இடத்தின் உரிமையாளராக இருப்பின் நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்தியதற்கான ரசீது, வாடகை கட்டடம் எனில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல், கட்டட உரிமையாளரிடம் ரூ.20க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம், உரிமக் கட்டணம் ரூ.700 செலுத்தியதற்கான ரசீது, நிரந்தர கணக்கு எண், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின் வரப் பெறும் விண்ணப்பங்கள், நிபந்தனைகளை கடைப்பிடிக்காத விண்ணப்பங்கள் நிா்வாக காரணங்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT