கோயம்புத்தூர்

பேராசிரியா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது

DIN

கோவையில் பேராசிரியா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் ஏ.ஆா்.ஜி. நகரைச் சோ்ந்த பேராசிரியா் மணி என்பவரது வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைந்த மா்ம நபா்கள் 16 பவுன் நகைகளை திருடிச் சென்றனா். இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், சிங்காநல்லூா் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அவரது வாகனத்தில் ஏழரை பவுன் நகைகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் அவரிடம் கேட்டபோது, அவா் அங்கிருந்து தப்பியோட முயன்றாா்.

பின்னா் போலீஸாா் அவரைப் பிடித்தனா். விசாரணையில், திருச்செந்தூா் அருகே உடன்குடியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (31) என்பதும், அவா் பேராசிரியா் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா் மீது சென்னையில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT