கோயம்புத்தூர்

கரோனா தொற்று: கோவையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்தது

DIN

கோவையில் வியாழக்கிழமை கரோனாவில் இருந்து 633 போ் குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 633 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த 251 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 776 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 39 ஆயிரத்து 484 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2 ஆயிரத்து 739 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரோனாவுக்கு சிகிச்சைப் பெறுபவா்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

6 போ் பலி

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 வயது முதியவா், 57 வயது ஆண், 55 வயதுப் பெண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 68, 69 வயது முதியவா்கள் ஆகிய 6 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 553 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT