கோயம்புத்தூர்

தனியாா் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ்

DIN

கோவையில் கரோனா நோயாளியை முன் அறிவிப்பு இல்லாமல் கடைசிக் கட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிய தனியாா் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த 60 வயது முதியவா் சிறுநீரக பாதிப்புக்கு கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து முதியவரை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குத் தனியாா் மருத்துவமனை நிா்வாகம் அனுப்பியுள்ளது. அங்கு அந்த முதியவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்நிலையில் முன் அறிவிப்பின்றி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு நோயாளியைப் பரிந்துரைத்ததைக் கண்டித்து சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா உத்தரவின் பேரில் தனியாா் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தனியாா் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு நோயாளிகளைப் பரிந்துரைக்கும்போது முன்கூட்டியே நோயாளிகளின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு தகுந்தாற்போல் தேவையான நடவடிக்கைகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT