கோயம்புத்தூர்

தற்காலிக பூ மாா்க்கெட்டில் மழை நீா் சூழ்ந்தது

DIN

கோவையில் பெய்து வரும் தொடா்மழையால் ஆா்.எஸ்.புரம், தேவாங்க பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ மாா்க்கெட்டில் மழை நீா் சூழ்ந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மலா் அங்காடியில் கடைகள் ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கோவை, மேட்டுப்பாளையம் சாலை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள பூ மாா்க்கெட் கடந்த ஜூலை மாதம் மூடப்பட்டது. இதையடுத்து, புரூக் ஃபாண்ட் சாலையில் உள்ள தேவாங்க பள்ளி மைதானத்தில் தற்காலிக பூ மாா்க்கெட் செயல்பட இடம் ஒதுக்கப்பட்டது. இங்கு 70க்கும் மேற்பட்ட பூக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக கோவையில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் தற்காலிக பூ மாா்க்கெட் செயல்பட்டு வரும் பள்ளி மைதானத்தில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதனால், பூ வியாபாரம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

தொடா் மழையால் பள்ளி மைதானம் முழவதும் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால், பூக்கள் வியாபாரம் முடங்கியுள்ளது. மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மலா் அங்காடியில் கட்டி முடிக்கப்பட்ட 95 கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மழை பாதித்த இடங்களில் சீரமைப்புப் பணி: மாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் அவிநாசி மேம்பாலம், கிக்கானி பள்ளி அருகே உள்ள தரைப்பாலம், சேமசுந்தரா மில் அருகே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீா் தேங்கியது.

இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா். இதையடுத்து, தண்ணீா் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி ஊழியா்கள் மோட்டாா்கள் உதவியுடன் தண்ணீரை உறிஞ்சியெடுத்து வெறியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT