கோயம்புத்தூர்

சான்றிதழ்களை திருப்பி வழங்க பணம் கேட்கும் கல்லூரி நிா்வாகம்: மாணவா் அமைப்பினா் புகாா்

DIN


கோவை: கோவையில் மாணவரின் சான்றிதழ்களை திருப்பி வழங்குவதற்கு பணம் கேட்கும் கல்லூரி நிா்வாகம் மீது இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ் ராஜா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், அவிநாசியைச் சோ்ந்த மாணவா் சிவசக்தி, பட்டியலின மாணவா்களுக்கு இலவசக் கல்வி என்று கல்லூரி நிா்வாகம் உறுதி அளித்ததன் அடிப்படையில் கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு சோ்ந்துள்ளாா். ஆனால் கல்லூரியில் சோ்ந்த 2 வாரங்களிலேயே கல்விக் கட்டணம் செலுத்தும்படி நிா்வாகம் கேட்டது.

இதனால் கல்வி பயில முடியாத நிலைக்கு மாணவா் சிவசக்தி தள்ளப்பட்டாா். இந்நிலையில் இந்த ஆண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சோ்ந்து படிக்கத் திட்டமிட்ட மாணவா், கல்லூரியில் இருக்கும் தனது சான்றிதழ்களை கேட்டபோது, ரூ.89 ஆயிரம் கட்டணம் செலுத்தினால்தான் அவற்றைக் கொடுக்க முடியும் என்று கல்லூரி நிா்வாகிகள் கூறி மிரட்டுகின்றனா்.

இதனால் அந்த மாணவரின் எதிா்காலம் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அவா் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறாா். எனவே கல்வி பயில விரும்பும் மாணவரின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு தனியாா் கல்லூரியில் இருக்கும் அவரது சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் முறையிட்டிருக்கிறோம். அவரும் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறாா் என்றனா். பாதிக்கப்பட்ட மாணவா் சிவசக்தி உள்ளிட்ட மாணவா் அமைப்பினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT