கோயம்புத்தூர்

கணக்கில் வராத ரூ.2.70 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் பறிமுதல்

DIN

கோவை: திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனம் பதுக்கி வைத்திருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.2.70 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

இது குறித்து கோவை ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியாா் ஆயத்த ஆடை நிறுவனம் முறையாக ஜி.எஸ்.டி. செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சொந்தமான 4 கிடங்குகளில் சோதனை நடத்தியதில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.2.70 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அந்த நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்ததில் ரசீது போடாமல் சுமாா் ரூ.40 கோடி முதல் ரூ.45 கோடி வரை வியாபாரம் செய்திருப்பது தெரியவந்தது. அந்த நிறுவனம் ஏற்கெனவே மேற்கொண்ட வா்த்தகத்துக்கு செலுத்தப்பட வேண்டிய ரூ.2.20 கோடி வரி நிலுவையை வசூலித்துள்ள அதிகாரிகள், மேலும் செலுத்த வேண்டிய தொகை குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT