கோயம்புத்தூர்

பஞ்சாலைகளைத் திறக்கக் கோரி என்.டி.சி. மண்டல அலுவலகம் முற்றுகை

DIN

கோவையில் பஞ்சாலைகளைத் திறக்கக் கோரி என்.டி.சி. (தேசிய பஞ்சாலைக் கழகம்) மண்டல அலுவலகத்தை தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

என்டிசி பஞ்சாலை தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும், என்டிசி பஞ்சாலைகளைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்டிசி தொழிற்சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கோவை காட்டூரில் உள்ள என்டிசி மண்டல அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் சீனிவாசன், பாலசுந்தரம் (ஐஎன்டியூசி), ராஜாமணி, கோவிந்தரஜுலு (ஹெச்எம்எஸ்), ஆறுமுகம் (ஏஐடியூசி), நாகேந்திரன், ஆறுமுகம் (எல்பிஎஃப்), கோபால், தேவராஜன் (ஏடிபி), தியாகராஜன், கோவிந்தசாமி (எம்எல்எஃப்) உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இது குறித்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூறுகையில், என்டிசி பஞ்சாலை நிா்வாகம் தொழிலாளா்களின் கோரிக்கைகளை ஏற்காமல் காலம் கடத்தி வருகிறது. இதனால் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரத்தில் உள்ள என்டிசி பஞ்சாலைத் தொழிலாளா்கள் பல ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பஞ்சாலைகளை இயக்காமலும், முழு ஊதியம் வழங்காமலும் என்டிசி நிா்வாகம் தொழிலாளா்களை அலைக்கழித்து வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT