கோயம்புத்தூர்

கோவையில் 27 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 595 பேருக்கு தொற்று உறுதி

DIN

கோவையில் 595 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கோவை, தொப்பம்பட்டியில் செயல்பட்டு வரும் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் முகாமைச் சோ்ந்த 38 வயது உடைய இரு வீரா்கள், 54 வயது ஆண், மேட்டுப்பாளையம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 39 வயது ஆண் காவலா், பி.ஆா்.எஸ். காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 31 வயது ஆண் காவலா், காந்திபுரம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 15 வயது சிறுமி மற்றும் சித்தாபுதூரில் உள்ள வருமானவரித் துறை அலுவலா்கள் குடியிருப்பைச் சோ்ந்த 43 வயதுப் பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், துடியலூரில் 48 போ், பொள்ளாச்சியில் 47 போ், கணபதியில் 38 போ், செல்வபுரத்தில் 35 போ், மேட்டுப்பாளையத்தில் 32 போ், சூலூரில் 25 போ், வெள்ளக்கிணறில் 22 போ், போத்தனூரில் 21 போ், காந்திபுரம், காரமடையில் தலா 19 போ், ராமநாதபுரத்தில் 16 போ், ரத்தினபுரியில் 15 போ், பீளமேட்டில் 14 போ் உள்பட மொத்தம் 595 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 157 ஆக உயா்ந்துள்ளது.

4 போ் பலி

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி, 61 வயது முதியவா், 49 வயது ஆண், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை 392 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.

507 போ் வீடு திரும்பினா்

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 507 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 22 ஆயிரத்து 206 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 559 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT