கோயம்புத்தூர்

தோட்டக்கலைத் துறை சாா்பில் மண்புழு உரம் விற்பனை

DIN

கோவையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் மண்புழு உரம், டிரைக்கொடொ்மா விரிடி போன்ற நுண்ணுயிரி உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ம.புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்திக்கு ரசாயன உரங்களை தவிா்த்து இயற்கை, உயிரியல் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். தற்போது ஒரு சில விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை உரங்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை, உயிா் உரங்களை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில், கண்ணாம்பாளையத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மண்புழு உரம், டிரைக்கொடொ்மா விரிடி பூஞ்சான்காரணி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. டிரைக்கொடொ்மா விரிடி கிலோ ரூ.135க்கும், மண்புழு உரம் ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இயற்கை உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் கண்ணாம்பாளையத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையிலும், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT