கோயம்புத்தூர்

விதிமீறல்: கோவை மாநகரில் இதுவரை 560 கடைகள் மீது நடவடிக்கை

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 560 கடைகள் மூடப்பட்டு, 64 கடை உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சமூக இடைவெளி மீறல், முகக் கவசம் அணியாமல் வியாபாரம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் கடைகளுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், விதிமீறும் கடைகள், வியாபாரிகள் மீது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் 5 மண்டலங்களிலும் தலா 20 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அக்குழுவினா் அந்தந்த மண்டலங்களில் உள்ள கடைகளைக் கண்காணித்து அதில் விதிமீறி ஏ.சி. பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.2,000, சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு ரூ.1,000, முகக்கவசம் அணியாமல் வியாபாரம் மேற்கொள்ளும் கடைகளுக்கு ரூ.500, முகக்கவசம் அணியாமல் சாலைகளில் செல்லும் மக்களுக்கு ரூ.100 என அபராதம் விதித்து வருகின்றனா்.

இதில், தொடா்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகளை மூடி மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை விதிமீறி செயல்பட்டதாக, 560 கடைகள் மூடப்பட்டு, 64 கடை உரிமையாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி பறக்கும் படை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுமக்கள் நீா்நிலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அரியலூா் ஆட்சியா் அறிவுரை

மண்வள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -அரியலூா் வேளாண் துறை

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பக்கிள் ஓடையில் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

பாலியல் புகாா்: தஞ்சை மருத்துவப் பேராசிரியா் நாகைக்கு இடமாற்றம்

SCROLL FOR NEXT