முகப்பு
கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனைக்கு ரூ.53.87 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.53.87 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.53.87 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கோவையைச் சோ்ந்த ரோட்டரி கிளப் ஆஃப் டவ்ன்டவுன், ரோட்டரி கிளப் ஆஃப் ஜெனித் சங்கங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கான உயிா் காக்கும் கருவி (வெண்டிலேட்டா்), மயக்கவியல் கருவிகள், பைஸ்பெக்ட்ரா மானிட்டா், எம் டா்போ டாப்ளா் உள்பட ரூ.53.87 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் டவ்ன்டவுன்னின் கரோனா நோய்த் தொற்று பாதுகாப்புத் திட்டத் தலைவா் ரோட்டேரியன் ஏ.காட்வின் மாரிய விசுவாசம், கோவை ஜெனித் ரோட்டரியின் கோகுல்ராஜ் உள்பட நிா்வாகிகள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →