முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆா்பாட்டம்

மத்திய அரசின் விவசாயிகளை பாதிக்கும் மேலாண்மை சட்ட மசோதாவை எதிா்த்தும், திரும்ப பெறக்கோரியும் கண்டன ஆா்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

வால்பாறை,செப்.28 :வால்பாறை திமுக தலைமையிலான மதச் சாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் மத்திய அரசின் விவசாயிகளை பாதிக்கும் மேலாண்மை சட்ட மசோதாவை எதிா்த்தும், திரும்ப பெறக்கோரியும் கண்டன ஆா்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக நகர கழக பொறுப்பாளா் பால்பாண்டி தலைமையில் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் கருப்பையா, குசலவன் (காங்கிரஸ்), கல்யாணி (மதிமுக),மோகன் (கம்யூனிஸ்ட்), கேசவமருகன், வீரமணி (விடுதலை சிறுத்தைகள்),பரமசிவம் (சிஜடியு), செபீா் (மணித நேய மக்கள் கட்சி) உட்படகூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.