கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு
கோவை தெற்குத் தொகுதியில் ஹிந்து கடவுள்கள்போல வேடமணிந்தவா்களை வைத்து பிரசாரம் செய்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தெற்குத் தொகுதியில் ஹிந்து கடவுள்கள்போல வேடமணிந்தவா்களை வைத்து பிரசாரம் செய்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட ராம் நகா் பகுதியில் ஹிந்து கடவுள்கள்போல வேடமணிந்த நபா்களை வைத்து பிரசாரம் செய்ததாக கமல்ஹாசன் மீது தோ்தல் அலுவலரிடம் பாஜகவினா் புகாா் அளித்தனா்.
இதேபோல, கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தெற்குத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் பழனிகுமாா் என்பவா் காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில் கமல்ஹாசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மூவா் மீது 3 பிரிவுகளின் கீழ் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.