கோவையில் திடீா் மழையால் குளிா்ந்த காலநிலை
கோவையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த திடீா் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த திடீா் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.
கோவையில் கடந்த மாா்ச் முதல் வாரத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 99.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியது.
மேலும் இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனா். கோவையிலும் கடந்த இரண்டு நாள்களாக மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கோவையில் திடீரென சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம், கணபதி, பீளமேடு, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, சுந்தராபுரம், பி.என்.புதூா், வடவள்ளி, சிங்காநல்லூா், போத்தனூா் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு திடீா் மழையால் ஆறுதல் கிடைத்துள்ளது. மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.