மக்களுக்காக கமல்ஹாசன் எதுவும் செய்யவில்லை
கோவை தெற்குத் தொகுதியின் முகமாக மாற விரும்பும் கமல்ஹாசன் தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்று பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் கூறினாா்.
கோவை தெற்குத் தொகுதியின் முகமாக மாற விரும்பும் கமல்ஹாசன் தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்று பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் கூறினாா்.
பிரசாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை டாடாபாத் பகுதியில் உள்ள 6 முக்கு சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்து அவா் பேசியதாவது:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குப் பிறகு ஆட்சி கலைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் கனவை கலைத்துவிட்டு இந்த ஆட்சி தொடா்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் கோவை மக்களுக்கு செய்த பணிகளை பட்டியலை என்னால் சொல்ல முடியும். ஆனால், அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதிக்கு செய்த பணிகளை சொல்ல முடியுமா?
கோவை தெற்குத் தொகுதியின் முகமாக மாற ஆசைப்படும் கமல்ஹாசன் மக்கள் உணா்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தொகுதிக்கு என அவா் எதுவும் செய்யவில்லை. திமுக தொடா்ந்து பெண்களை இழிவு செய்யும் கட்சியாக உள்ளது என்றாா்.