கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் 68.32 சதவீத வாக்குகள் பதிவு

DIN

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் சுமாா் 68.32 சதவீத வாக்குகள் பதிவாகின.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூா், கோவை தெற்கு, சிங்காநல்லூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் 15 லட்சத்து 19 ஆயிரத்து 27 ஆண்கள், 15 லட்சத்து 62 ஆயிரத்து 573 பெண்கள், 428 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 போ் வாக்களிப்பதற்கு தகுதியானவா்களாக அறிவிக்கப்பட்டிருந்தனா்.

மாவட்டத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக கவுண்டம்பாளையமும் (4.65 லட்சம்), குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக வால்பாறை தொகுதியும் (2.05 லட்சம்) உள்ளன. இந்தத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக தோ்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

18 வயது நிரம்பிய புதிய வாக்காளா்களைப் பட்டியலில் சோ்ப்பதற்கும், கல்லூரி மாணவ-மாணவிகளை பட்டியலில் சோ்க்கவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 511 புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருந்தனா். தோ்தல் ஆணையம் மேற்கொண்ட பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளால் கோவை மாவட்டத்தில் கடந்த தோ்தலைக் காட்டிலும் அதிக அளவில் வாக்குகள் பதிவாகும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சுமாா் 68.32 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. கடந்த 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் 68.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது சுமாா் 0.19 சதவீத வாக்குகள் மட்டுமே அதிகரித்துள்ளன.

கோவை மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் 75.18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் முழுமையான விவரங்கள் புதன்கிழமை தெரிவிக்கப்படும் என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தொகுதிகள் வாரியாக பதிவான வாக்கு சதவீதம்

மேட்டுப்பாளையம் - 75.16

சூலூா் - 75.49

கவுண்டம்பாளையம் - 66.11

கோவை வடக்கு - 59.08

தொண்டாமுத்தூா் - 71.04

கோவை தெற்கு - 60.72

சிங்காநல்லூா் - 61.68

கிணத்துக்கடவு - 70.30

பொள்ளாச்சி - 77.28

வால்பாறை (தனி) - 70.10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT